Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் பல மணி நேரம் ... திருவேட்டீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி; உலக நலன் வேண்டி கூட்டு பிரார்த்தனை திருவேட்டீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படியளந்தார் பரமசிவம்; அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா வந்த ஈசன்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
படியளந்தார் பரமசிவம்; அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா வந்த ஈசன்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 டிச
2024
10:12

மதுரை :  அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர வீதி உலா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.


மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா நடைபெற்றது. மதுரையில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க அஷ்டமி சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் உலா வந்தனர். ஒரு சமயம் உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க சிவபெருமான் புறப்பட்டார். அவரை சோதிக்க நினைத்த அம்மன், பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம், ஒரு உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லை, என்றார் அம்மன். பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம்.


அதன்படி இன்று (டிச.,23 ) அதிகாலை கோயிலில் இருந்து இருவரும் புறப்பாடாகி, கீழமாசிவீதி வந்தனர். அங்கு இரு சப்பரங்களில், சிவபெருமானும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கீழவெளிவீதி, தெற்கு வெளி வீதி, மேலவெளிவீதி வடக்கு வெளிவீதி என நான்கு வெளி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளக்க, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை தூவியும், அதை எடுத்தும் வழிபட்டனர். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar