மார்கழி எட்டாம் நாள்; ஸ்ரீரங்கத்தில் சாணூரன் முஷ்டிகன் வதம் கோலத்தில் உற்சவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2024 11:12
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி பாவை நோன்பின் ஐந்தாம் எட்டாம் இன்று பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் சாணூரன் முஷ்டிகன் வதம் திருக்கோலத்தில், கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் அருள்பாலித்தனர்.
மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு என்பது இன்றைய பாசுரத்தின் பொருள்.