திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோயிலில் சுதர்ஸன ஜெயந்தியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு சுதர்ஸன ஹோமம் நடந்தது. நெல்லை ஜங்ஷனில் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. சுதர்ஸன ஜெயந்தியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு சுதர்ஸன ஹோமம் நடந்தது. முன்னதாக சங்கல்பம், சுதர்ஸன மந்திரங்கள் ஆவர்த்தி, ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு சகலவிதமான திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு தங்க கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனையும், மந்திர புஷ்பம், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை மாதவ பட்டாச்சாரியார், கோவிந்தன் பட்டாச்சாரியார், வரதராஜன், வெங்கடேஷ், ரமேஷ் பட்டாச்சாரியார், ஸ்ரீதர் பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.