பதிவு செய்த நாள்
24
டிச
2024
01:12
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் அன்னை சாரதா தேவியின், 172வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவை ஒட்டி காலை, 6:30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். கலா நிலைய பள்ளி செயலாளர் சுவாமி ஹரிவ்ரதானந்தர் பேசினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பக்தர்கள் என, திரளானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. பின்னர், மாணவர்கள் மற்றும் வித்யாலயா குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் பங்கேற்ற பஜனை நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, மகா ஹோமம், அன்னதானம் ராமகிருஷ்ணர் கோவிலில் நடந்தது. மாலையில் பெண்கள் பங்கேற்ற சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.