ஆரியன்காவு தர்மசாஸ்தா – புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2024 11:12
ஆரியன்காவு; தர்மசாஸ்தா சபரிமலையில் சன்னியாசி, குளத்துப்புழையில் பாலகன், ஆரியங்காவில் கிரகஸ்தன், அச்சன்கோயிலில் வனஅரசனாக அருள்பாலிக்கிறார். ஆரியங்காவில் தர்மசாஸ்தா, தன்னை உணர்ந்து, பர பிரம்மமும், ஜீவ பிரம்மமும் ஒன்றே என்று உணர்ந்த புஷ்கலா தேவியின் பக்தியை மெச்சி, தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாக ஐதீகம்.
இவர் சவுராஷ்டிரா குலதேவி என்பதால், சடங்கு சம்பிரதாயங்கள் சவுராஷ்டிரா வழக்கப்படி நடக்கிறது.இதனால் திருவாங்கூர் மன்னர், தேவஸ்வம் போர்டு நிர்வாகம் சவுராஷ்டிரா சமூகத்தினரை ‘சம்பந்தி’யாக கவுரவிக்கின்றனர். இந்தாண்டு திருக்கல்யாண உற்ஸவம் டிச.23ல்கேரள மாநிலம் மாம்பழத்துறையில் அம்மனின் ஜோதி ரூப தரிசன வழிபாட்டுடன்துவங்கியது. நேற்று காலை கோவில் கல்மண்டபம் அருகில் சவுராஷ்டிரா சமூகத்தினரை சம்பந்தி மரியாதையுடன் வரவேற்றனர். புஷ்கலாதேவி பகவானோடு ஜோதிரூபத்தில் ஐக்கியமாகி, ஆனந்தமாக அம்பாள் வீற்று இருப்பதை கொண்டாடும் வகையில், ‘பாண்டியன் முடிப்பு பொங்காலா’ என்ற வைபவம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ‘தாலப்பொலி ஊர்வலம்’, இரவு நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று (டிச.25) இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் பகவான், அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.