பதிவு செய்த நாள்
30
டிச
2024
04:12
ஆண்டிபட்டி; ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடந்தது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு கலச பூஜைகள் நடந்தது. புனித நீர் கலசத்தை கோயில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட 12 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, துளசி மாலை, வடை மாலை சாத்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்தனர். ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி ராஜ அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டி வழிபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், லட்டு, வடை, கேசரி, புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் கோயில் சார்பில் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.