பதிவு செய்த நாள்
30
டிச
2024
04:12
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் விஸ்வநாதபுரம் அருகே உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவை ஒட்டி, ஒயிலாட்ட நிகழ்ச்சிகள், மகா உற்சவர் திருவீதி உலா, கம்பத்தாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அன்னதானமும் நடந்தது. பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
இதே போல பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற் கல்வியியல் கல்லூரியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் நடந்தது. வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா தலைமை வகித்தார். விழாவை ஒட்டி துறவிகள் மற்றும் இசை ஆசிரியர்களின் பஜனை மற்றும் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. மகாவீரர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு மங்கள ஆரத்தி நடந்தது. விழாவில் வித்யாலய வளாகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், துறை தலைவர்கள் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாருதி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.