திருப்புத்தூர் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 05:12
திருப்புத்தூர்; திருப்புத்தூர் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு நித்யபடி பூஜைகள் நடந்து பக்தர்கள் தரிசனம் துவங்கியது. தொடர்ந்து காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வடை மாலை, ரூபாய் மாலையுடன் தங்க அங்கி அணிந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆஞ்சநேயர், விநாயகர் சன்னதிகள் முழுவதும் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிப்பட்டிருந்தது. தொடர்ந்து மூலவருக்கும், உற்ஸவருக்கும் அலங்காரத் தீபாராதனை நடந்து பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலையில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமாக வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் இரவில் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கு தீபாராதனை நடந்து. சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாட்டினை நிர்வாகக் கமிட்டி, பரம்பரை அறங்காவலர்கள் செய்தனர்.