திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களுக்குபின்பு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் ஆஞ்சநேயர், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம் முடிந்து மூலவருக்கு வடமாலை சாத்துக்குடியானது. எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளியம்மன் கோயில் ஆஞ்சநேயர், திருநகர் மகாலட்சுமி காலனி வர சித்தி விநாயக கோயில் பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் பூஜை முடிந்து ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துப்படியானது.