பதிவு செய்த நாள்
30
டிச
2024
05:12
சூலூர்; சூலூர் வட்டாரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.
சூலூர் வட்டாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஜெயந்தி விழா இன்று பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. கணியூரில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அனுமந்த ராயருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரிய குயிலியில் உள்ள ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் கோவிலில், ஹனுமன் ஜெயந்தி விழா, கடந்த,28 ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் நாம சங்கீர்த்தனம், பஜனை வள்ளி கும்மியாட்டம் நடந்தது. கள்ளப் பாளையம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ரகு வீர ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. காய், கனி, வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ. ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.