திருநெல்வேலியிலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிவன் கோயிலில், தமிழ் மூதாட்டி அவ்வையாரைத் தரிசிக்கலாம். அதுவும், முருகப்பெருமான் சன்னதிக்கு நேர் எதிரில், அவ்வையார் சிலையைப் பிரதிஷ்டை செய்திருப்பது தனிச்சிறப்பு. தமிழ் மூதாட்டிக்கு அருகிலேயே, அவருக்கு முருகப் பெருமான் நாவல் பழம் தந்த காட்சியும் ஓவியமாகத் திகழ்கிறது. அதுமட்டுமின்றி, அவ்வை இயற்றிய பழந்தமிழ்ப் பாடல்களும் எழுதப்பட்டுள்ளன!