திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையே உள்ள தலம், ஐயர்மலை. இங்கு 952 படிக்கட்டுகள் கொண்ட ஒரு மலை மீது அழகிய சிவாலயம் ஒன்று உள்ளது. இங்கு சிவ வழிபாட்டிற்காக பக்தர் ஒருவர் கொண்டு வந்த பாலைக் காகம் கவிழ்த்து விட்டதால் அந்தக் காகம் எரிந்து சாம்பலாகி விட்டதாம். அன்று முதல் இம்மலைக்கு காகம் அணுக முடியாத மலை என்ற பெயர் ஏற்பட்டு, இன்றும் வழக்கில் இருக்கிறது.