Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் ... மாணவ – மாணவியருக்கு பரிசு வழங்கி காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஆசி மாணவ – மாணவியருக்கு பரிசு வழங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் கடல் தண்ணீர் கருப்பாக மாறியதால் பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் கடல் தண்ணீர் கருப்பாக மாறியதால் பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

02 ஜன
2025
10:01

துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.


கோவில் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அதிக அளவிலான கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட இயலாத சூழலும் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இதே போல் பக்தர்கள் கடற்கரையில் இறங்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி சீர் செய்தனர். ஆனால் மீண்டும் தற்போது அதிகளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களை பாதுகாப்பாக புனித நீராடும்படி கோவில் கடற்கரை பணியாளர்களும், காவல்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதேபோல, கோவில் கடற்கரை கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் கருப்பு நிறத்துடன் காணப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததால் ஒருவாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடற்கரை பகுதியில் கடல் பெருக்கு ஏற்பட்டு அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறுவதால் தண்ணீர் குழப்பிய நிலையில் கருப்பு நிறத்தில் மாறி காணப்படுவதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar