Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துாரில் கடல் தண்ணீர் ... அயோத்தி ராமர் கோவிலில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் அயோத்தி ராமர் கோவிலில் ஒரே நாளில் 2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணவ – மாணவியருக்கு பரிசு வழங்கி காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஆசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாணவ – மாணவியருக்கு பரிசு வழங்கி காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஆசி

பதிவு செய்த நாள்

02 ஜன
2025
10:01

காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் சமய சமுதாய கலை, கலாசார, பண்பாட்டு சேவை அமைப்பான ஹிந்து சமய மன்றம் மற்றும் காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் பள்ளி, கல்லுாரி, மாணவ – மாணவியருக்கான பாவை விழா போட்டிகள், இரண்டு நாட்களுக்கு முன் சங்கரா கல்லுாரியில் நடந்தது. பாட்டு, ஓவியம், மாறுவேடம், கோலம், பாரம்பரிய உணவு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பல்வேறு பள்ளி, கல்லுாரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ – -மாணவியர் பங்கேற்றனர். இரண்டாம் நாளான நேற்று முன்தினம், தனியார் பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்லுாரி உதவி பேராசிரியர்கள், முனைவர்கள், ஆய்வாளர்களுக்கான பக்தி நெறி பயிலரங்க நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சமய நெறி, பன்னிரு திருமுறை வரலாறு, திருவெம்பாவையும், வழிபாட்டு மரபும், சந்தமிகு தமிழ்மறை, அபங்க நாம ஸங்கீர்த்தனம், வழிவந்த பக்திநெறி உள்ளிட்ட தலைப்புகளில், முனைவர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர். பாவை விழா போட்டியில் வெற்றி வெற்ற மாணவ- – மாணவியருக்கு, நேற்று இரவு சங்கரமடத்தில் நடந்த விழாவில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் பரிசு, சான்றிதழ் வழங்கி அருளுரையாற்றினார். இவ்விழாவில், சங்கரமடம் மேலாளர் சுந்தரேச ஐயர், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar