பதிவு செய்த நாள்
30
நவ
2012
11:11
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில், லலிதாம்பிகை வேத சிவாகம டிரஸ்ட் சார்பில், வரும் 2ம் தேதி காலை ராகு, கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை ராகு பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலா ராசிக்கும், கேது பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் பிரவேசிக்கின்றனர். அதனையொட்டி, அன்று காலை 10.30 மணிக்கு, மொரட்டாண்டியில் அமைந்துள்ள, உலகின் மிக உயரமான 12 அடி உயர ராகு பகவானுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம், நைவைத்தியம் நடக்கிறது. அதேபோல, 12 அடி உயர கேது பகவானுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம், 16 கிலோ, கொள்ளு சுண்டல் நைவைத்தியம் நடக்கிறது. காலை 6 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமங்கள், 8 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடக்கிறது. சிதம்பர குருக்கள் தலைமையில், காலை 9 மணிக்கு ராகு பகவான், கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி, மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு ராகு பகவான், கேது பகவான் அருளைப் பெறலாம். பரிகாரம், பரிகார ஹோமம், தோஷ பரிகார அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தை அணுகலாம். நாக தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், திருமணத் தடை, புத்திர பாக்கியம், ராகு கேது, பரிகார தோஷங்களுக்குப் பரிகார ஹோமங்கள் செய்யப்படும்.