விழுப்புரம் மாவட்டம்மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று காலை முதல் இரவு வரை நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் ஜீவானந்தம், விழுப்புரம் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோவில் பணியாளர்கள் மற்றும் சேவார்த்திகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், பக்தர்கள் 63 லட்சத்தி 20ஆயிரத்து 148 ரூபாய் ரொக்கப்பணம், 76 கிராம் தங்கம், 410 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இப்பணியின் போது அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், கண்காணிப்பாளர் பாக்கியலட்சுமி, ஆய்வர் சங்கீதா, மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். மேல்மலையனுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.