பகல் பத்து விழா; சுந்தரராஜ பெருமாளுக்கு பனிப்போர்வை சாற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2025 05:01
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பகல் பத்து உற்சவத்தில் நான்காம் நாளில் பெருமாள் பனிப்போர்வை சாற்றி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் மூலவர் பரமஸ்வாமி வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு தினமும் பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு, ஆழ்வார்கள் சன்னதியில் தூப, தீப ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து ஜன. 10 அன்று காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது.