சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2025 12:01
சுசீந்திரம்; சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு காலை 6 மாணிக்கவாசகர் பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10 நாள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார். முக்கிய நிகழ்ச்சியாக 10ம் திருவிழாவான 13ம் தேதி காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு நடராஜர் திரு விதி உலா வருதலும், இரவு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.