Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடுகளில் ஜன.16ல் மீனாட்சி அம்மன் ... முன்னெச்சரிக்கை  நடவடிக்கை; திருப்பதி வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகாசராயர் கோவிலில் திருப்பணி: ஆகமவிதிகள் மீறுவதாக பக்தர்கள் புகார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆகாசராயர் கோவிலில் திருப்பணி: ஆகமவிதிகள் மீறுவதாக பக்தர்கள் புகார்

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
12:01

அவிநாசி; அவிநாசி ஆகாசராயர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளில் ஆகம விதிகள் மீறப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெறுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலாக ஆகாச ராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது. அதில், கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான கூடம் மற்றும் மண்டபத்திற்கும் இடையில் புதிதாக மதிற்சுவர் எழுப்பி உள்பகுதியில் வரவேற்பு வளைவு கட்டப்படுகிறது. இதனால், நேர்த்திக்கடன் செலுத்த கிடா வெட்டி பொங்கல் வைக்க வரும் போது பக்தர்களுக்கு இடநெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆண்டுதோறும், சித்திரை மாதம் நடைபெறும் அவிநாசி கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பெரிய கருணைபாளையம் மற்றும் ராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மண் குதிரைகளை ஆகாசராயர் கோவிலுக்கு கொண்டு வருவது வழக்கம் இருந்து வருகிறது. ஆனால், தற்போது கட்டப்படும் உள்பிரகார அலங்கார வளைவு நுழைவுப் பகுதி மிகவும் குறுகளாக உள்ளதால், குதிரையை சுமந்து கொண்டு பக்தர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படும். இதர விசேஷ நாட்களில், பக்தர்கள் அதிகளவில் கூடும் பொழுது, இட நெருக்கடி ஏற்படும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.


பக்தர்கள் சிலர் கூறுகையில், ‘ஆகாசராயர் கோவில் அருகில், நான்கு தனியார் மண்டபத்துக்கு ஆதரவாக ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செயல்படுகின்றனர். இதுதவிர, பாரம்பரியமாக கோவிலில் நடக்கும் சம்பிரதாயங்களை தொடர்ந்து செய்ய முடியாதபடி சிலர் செயல்படுகின்றனர். ஏற்கனவே கோவிலை சுற்றி மதிற்சுவர் உள்ள நிலையில் புதியதாக கோவிலுக்குள் மற்றொரு சுவர் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எனவே, ஆகமவிதிகளை மீறாமலும், அறநிலையத்துறையின் விதிகளின்படியும், கோவிலின் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்,’ என குற்றம்சாட்டினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar