முன்னெச்சரிக்கை நடவடிக்கை; திருப்பதி வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2025 03:01
திருப்பதி; தற்பபோது எச்.எம் பி.வி வைரஸ் பரவி வரும் சூழலில் பக்தர்கள் முக கவசம் அணிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வர வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு கூறுகையில்; நாடு முழுவதும் எச். எம். பி .வி வைரஸ் பரவி வரக்கூடிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வரவேண்டும். மேலும் வைகுண்ட ஏகாதசி ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இலவச சர்வதரிசன டோக்கன்கள் நாளை காலை முதல் வழங்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை 10 நாட்களுக்கு அனுமதிக்கப்படுவர். மற்ற பக்தர்கள் டிக்கெட் டோக்கன் இல்லாவிட்டாலும் திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் சாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.