ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. கோடி வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாள்களுக்குப் பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் ஊழியர்கள் திறந்தனர். பின் உண்டியலில் இருந்த காணிக்கைகளை சேகரித்து கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ. 1 கோடியே ## லட்சத்து ## ஆயிரத்தி ### ரூபாயும், தங்கம் ## கிராம், வெள்ளி # கிலோ ### கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, சேலம் பகுதியை சேர்ந்த சிவனடியார் குழுவினர் பங்கேற்றனர்.