பதிவு செய்த நாள்
10
ஜன
2025
07:01
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டிற்கான சொர்க்க வாசல் திறப்பு, இன்று நடைபெற்றது, இதை முன்னிட்டு பக்தர்கள் ரங்கா... ரங்கா... என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவானது தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.