பதிவு செய்த நாள்
11
ஜன
2025
05:01
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி தவச்சாலையில் உலக நன்மைக்காக மகா யாகம் நடைபெற்றது.
மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் உள்ள மகாசித்தர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்,நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கொடிய நோய்களிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் 50 க்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு செழியன் சுவாமிகள் தலைமையில் மகா யாகம் நடைபெற்றது. முன்னதாக சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளுக்கு பால்,பன்னீர்,சந்தனம்,இளநீர் நெய்,தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.மகாயாகத்தில் கட்டிக்குளம் மானாமதுரை மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது. மகா யாகத்திற்கான ஏற்பாடுகளை கருப்பனைந்தல் மடம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி தவச்சாலை நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.