பதிவு செய்த நாள்
13
ஜன
2025
08:01
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில, சிவகாமி சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில இன்று (ஜன.,13) காலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, குங்குமம், தேன், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.