பதிவு செய்த நாள்
01
டிச
2012
11:12
கல்பாக்கம்: மெய்யூர் ஆதிகேசவப்பெருமாள் கோவில்,கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.சதுரங்கப்பட்டினம், மெய்யூரில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ், ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில், கடந்த, 1954ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.சமீபத்தில், நன்கொடை மூலம், புதிதாக தாயார் சிலை பிரதிஷ்டை செய்தும், சுவாமி சன்னிதிக்கு வர்ணம் தீட்டியும் திருப்பணி செய்யப்பட்டது. நேற்று காலை, யாகம் மற்றும் ஹோமத்திற்கு பின், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் வழிபட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் வீராசாமி, சதுரங்கப்பட்டினம் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், சென்னை அணுமின் நிலைய இயக்க கண்காணிப்பாளர் வெங்கடாசலம், பொறியாளர் விஸ்வநாதன் உட்பட, பலர் பங்கேற்றனர். திருப்போரூர் சிவசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், வெகு சிறப்பாக நடந்தது.திருப்போரூர் அபிராமி நகரில், சிவசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று காலை 10:30 மணிக்கு, வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.