காஞ்சிபுரம் நீராழி மண்டபத்தில் செடிகள் கோபுரம் சேதமாகும் அபாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2025 03:01
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சாலை தெருவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதீர்த்த குளம், அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். ஹிந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், குளத்தின் மையப்பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளது. இச்செடிகளின் வேர்களால், கோபுரம் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ளது. செடிகள் வளர்ந்து மரமானால், மண்டபம் வலுவிழந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, சர்வதீர்த்த குளத்தின் நீராழி மண்டபத்தில் வளரும் அரசமர செடிகளை வேருடன் அகற்ற ஹிந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.