பதிவு செய்த நாள்
17
ஜன
2025
03:01
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில், மகம் நட்சத்திர உற்சவம் நடைபெறும். அதன்படி. நடப்பு ஆண்டுக்கான உற்சவம் இன்று நடந்தது. இதில், இன்று காலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தார். மேலும், சதாவரம், கண்ணகிபுரம், அண்ணா நெசவாளர் குடியிருப்பு, சின்ன அய்யங்குளம், ஓரிக்கை வழியாக பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, ஓரிக்கை மஹா பெரியவா மணிமண்டபம், வேளிங்கப்பட்டரை, தேசிகர் கோவில் வழியாக, மாலை 6:00 மணிக்கு கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து, திருமழிசை ஆழ்வார் சாற்றுமறை உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.