Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல மகர விளக்கு காலம் ... ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா திரளான பக்தர்கள் தரிசனம் ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகதளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹெத்தையம்மன் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜெகதளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹெத்தையம்மன் திருவிழா

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
05:01

குன்னூர்; குன்னூர் கிராமத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய கன்னி ஹெத்தை அம்மன் திருவிழா, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியுடன், சிறப்பாக கொண்டாடப்பட்டது.


நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதில், ஜெகதளா ஆறூர் மக்களால் கொண்டாப்படும், இந்த பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர்; காரக்கொரையில் பூ குண்டம் இறங்கினர். இன்று கன்னி ஹெத்தையம்மன் கோவில், அமைந்துள்ள ஜெகதளாவில், பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவிலில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சேலை அம்மனுக்கு சார்த்தப்பட்டது. மடியரை என அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து, துவங்கிய அம்மன் ஊர்வலத்தில், ஹெத்தை தடிகள், வண்ண குடைகளுடன் ஹெத்தைக்காரர்கள், பங்கேற்றனர். இதில், குடைகள் புடைசூழ, ஆடல் பாடல்களுடன் ஹெத்தை அம்மனை பூசாரி தனது தலையில் சுமந்தவாறு, வந்தது, பக்தர்களை பரவசப்படுத்தியது. சிறுமியர் பாரம்பரிய உடை அணிந்து ஹெத்தையம்மனாக பாவித்து ஊர்வலத்தில் முன்னதாக வந்தனர். வரும் வழியில் வேட்டிகளை விரித்து, அதன் மீது நடக்க வைத்தனர். ஜெகதளா ஹெத்தை கோவிலில் சுற்றுக்கல்லில், காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய வெள்ளை உடை அணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar