பரமக்குடி; பரமக்குடியில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கிறார். நேற்று மாலை 6:00 மணி தொடங்கி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சந்தன காப்பு சாற்றப்பட்டு, வடை மாலை அணிவித்து தூப தீப ஆராதனைகள் நடந்தது. இதேபோல் பரமக்குடி மீனாட்சி அம்மன், ஈஸ்வரன் கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் உள்ளிட்ட அனைத்து சிவன், முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.