புதுச்சேரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2025 10:01
புதுச்சேரி; புதுச்சேரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேஷ நிகழ்ச்சியையொட்டி, நேற்று மாலை குத்து விளக்கு பூஜை நடந்தது. அதில், 108 பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக் கேற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு, பூஜையுடன், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியை, அடுத்து, வரும் 31ம் காலை 6:00 மணிக்கு சிறப்பு ேஹாமம், தொடர்ந்து 9:00 மணிக்கு வாசவி திருமண மண்டபத்தில் இருந்து 108 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில், நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.