ஆன்மீக திருவிழாவில் அஷ்டலட்சுமிகள், 12 ஜோதிர் லிங்க தத்ரூப தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2025 10:01
நத்தம்; நத்தம் அருகே மேட்டுக்கடையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசனம், அஷ்ட லட்சுமிகளின் தரிசன ஆன்மீகத் திருவிழா நடந்து வருகிறது. வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெறும் 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசனம், அஷ்ட லட்சுமிகளின் தரிசன நிகழ்வை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொடங்கிவைத்தார். இதில் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப்பிர தேசம், தமிழகம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இருந்து ஜோதிர் லிங்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த லிங்கங்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், அஷ்டலட்சுமிகளின் தத்ரூப தரிசன நிகழ்ச்சியை யொட்டி, 9 சிறுமிகள் அஷ்டலட்சுமிகளின் அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில் நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 12 ஜோதிர் லிங்கங்களின் ஆன்மிக் கண்காட்சி தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.