சுக்ரீஸ்வரர் கோவில் திருப்பணி சிறப்பு வழிபாட்டுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2025 11:01
திருப்பூர்; திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் ஆவுடைநாயகி சமேத ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், மிகவும் பழமை வாய்ந்தது. தொல்லியல்துறை பராமரிப்பில் இருக்கும் இக்கோவிலில், 2008 ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், தொல்லியல்துறை அதிகாரிகள் முன்னிலையில், நேற்று திருப்பணி துவக்கிவைக்கப்பட்டது. ஸ்ரீசுக்ரீஸ்வரர் மற்றும் ஆவுடையநாயகி அம்மனுக்கு, தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்து திருப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. பூஜை நடக்கும் போது, கோபுரத்தின் மீது கருடன் வட்டமிட்டது கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.