Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுக்ரீஸ்வரர் கோவில் திருப்பணி ... அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்; வேதனையில் பக்தர்கள் அருப்புக்கோட்டை கோவிலில் திதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல நூறு ஆண்டுகளாக குழிக்குள் உள்ள மூடி அம்மனை வழிபட்டு காதணி விழா நடத்தும் நூதனம்
எழுத்தின் அளவு:
பல நூறு ஆண்டுகளாக குழிக்குள் உள்ள மூடி அம்மனை வழிபட்டு காதணி விழா நடத்தும் நூதனம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
11:01

பல்லடம்; பல்லடம் அருகே, குழிக்குள் உள்ள மூடி அம்மனை வழிபட்டு, காதணி விழாவை கிராம மக்கள் நூதன முறையில் கொண்டாடி வருகின்றனர்.


பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை, சங்கோதிபாளையம் கிராமத்தில் வசிக்கும் கொங்கு இனத்தின் ஒரு பிரிவான முழுக்காத குலத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளின் காதணி விழாவை  நூதன முறையில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், குழந்தைகளின் காதணி விழாவுக்கு முன்பாக, இங்குள்ள மூடி அம்மனை வழிபடுவது வழக்கம். பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. முன்னதாக, காதணி விழா செய்பவர்கள், குழிக்குள் உள்ள அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தேங்காய், பழம், பூ மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் பொங்கல் படையல் வைத்து குடும்பத்துடன் வழிபடுவர். இந்த சடங்கின் மூலம் சீர் விழா நல்லபடியாக நடக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து, சீர்‌ செய்பவர்கள், நவதானியங்களை குழிக்குள் இட்ட பின், அம்மனை வழிபட்டு விட்டு, குழியை மூடி‌ விடுவர். அடுத்து வேறு யாரேனும் சீர் செய்யும் போதுதான் மீண்டும் மூடியை திறந்து அம்மனுக்கு வழிபாடு செய்வார்கள். அதுவரை, குழி மூடப்பட்டுதான் இருக்கும். அம்மன், குழிக்குள் வைத்து மூடப்படுவதால், இந்த அம்மனுக்கு மூடி அம்மன் என்று பெயர். கடந்த காலங்களில், ஏழு நாட்கள் வரை மூடி அம்மனுக்கு வழிபாடுகள் விமரிசையாக நடக்கும். தற்போது, எங்களுக்கு தெரிந்த வகையில் வழிபாடு செய்து வருகிறோம் என்றனர். முன்னதாக, மூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின், வழக்கம்போல் குழி மூடப்பட்டது. அனைவரும் பிரசாதம் சாப்பிட்டு வீட்டுக்கு திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar