Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை ... சாணார்பட்டி அருகே அமாவாசை மகா பிரத்தியங்கிரா தேவி யாகம் சாணார்பட்டி அருகே அமாவாசை மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
10:01

மயிலாடுதுறை; திருநாங்கூரில் நடந்த 11 தங்க கருட சேவை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை சேவித்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேங்களில் 11 கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் நாங்கூரில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் 11 தங்க கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு கருடவ சேவை உற்சவம் நேற்று இரவு நடந்தது. திருநகரி கோவிலில் இருந்து புறப்பட்ட திருமங்கையாழ்வார்  கோவல்களுக்கு சென்று கருட சேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று நேற்று மாலை மணிமாட கோவில் என்று அழைக்கப்படும்  நாங்கூர் கோவிலில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தமன், வரதராஜன், வைகுந்த நாதன், மாதவப் பெருமாள், பார்த்தசாரதி, கோபாலன் ஆகிய 11 பெருமார்களும், புருஷோத்தமன் கோவிலில் இருந்து மணவாள மாமுனிகளும் எழுந்தருள திருமங்கை ஆழ்வார் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. 


இன்று அதிகாலை ஷேச வாகனத்தில் மணவாள மாமுனிகளும், ஹம்ச வாகனத்தில் திருமங்கை ஆழ்வாரும் தொடர்ந்து தங்க கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன் 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக மணிமாட கோவில் வாயிலில் எழுந்தருள திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களை  மனமுருக பாடினர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெருமாள்கள், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் வீதி உலா காட்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 11 பெருமாளை தங்க கருட வாகனத்தில் ஒரு சேர கண்டு சேவித்தனர். உற்சவ ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர், கருட சேவை கமிட்டியினர் செய்திருந்தனர். எஸ்பி. ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar