கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப். 8ம் தேதி நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2025 09:02
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா வருகிற மட்டஏப்ரல் மாதம் 8 ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, அடுத்த மாதம் மார்ச் 11 ம் தேதி சகுனம் கேட்டல், 28 ம் தேதி தேர்முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏப்ரல் மாதம் 2 ம் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் கொடியேற்றுதல், 6 ம் தேதி மஞ்சள் நீராடுதல், வசந்தம் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 7 ம் தேதி காலை 11:00 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல், 8 ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் பூ இறங்குதல், அன்று மாலை 3:30 மணிக்கு சுவாமி திருத்தேரில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 12 ம் தேதி மஞ்சள் நீர் தரிசனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபரீஸ்குமார், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், ஆகியோர் செய்து வருகின்றனர்.