கோவை; தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு -அன்சாரி ரோடு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடைபெற்றது. இதில் உற் சவர் வள்ளி தேவசேனா சமேதரராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* கோவை தாமஸ் வீதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.