திருப்பூர்; சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் பழமையானது. இங்கு, வரும், 4 ம்தேதி மாலை, தைப்பூச தேரோட்ட திருவிழா துவங்குகிறது. 5 ம்தேதி காலை, 11: 00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் திருவீதி உலாக்கள் நடக்கின்றன. 10 ம்தேதி மாலை, திருக்கால்யாண உற்சவமும், 11 ம்தேதி மாலை, 3:00 மணிக்கு, விநாயகர் மற்றும் மந்திரகிரி வேலாயுத சுவாமி தேரோட்டம் நடக்கிறது.