பதிவு செய்த நாள்
03
பிப்
2025
11:02
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 30ல் கணபதி பூஜை மற்றும் மாலை 5:00 மணிக்கு பிரவேச பலி பூஜையுடன் விழா துவங்கியது. கடந்த 31ம் தேதி காலை 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், மாலை 5:00 மணிக்கு முதல் கால பூஜை, நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தது. அதை தொடர்ந்து, காலை 10:20 மணிக்கு கோபுர கலசத்தின் மீது, புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் எல்லம்மனுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், கோவில் அறங்காவலர்கள் மற்றும் பல்வேறு கிராம வாசிகள் பங்கேற்றனர்.
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத குணம்தந்த நாதர் கோவில் உள்ளது. நேற்று காலை 5:00 மணிக்கு, யாகசாலை பூஜை, சங்கல்பம் ஆகியவை நடந்தது. பின், 5:30 மணிக்கு மஹா பூர்ணாஹிதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 9:30 மணிக்கு கோவில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதேபோல், கடல்மங்கலம் கிராமத்தில் உள்ள மூங்கிலம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.