திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெறும் உற்சவ நாட்களில், பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது. தை தேர் பூபதித்திருநாள் உற்சவம் ஆறாம் நாளான இன்று அதிகாலை கற்பக விருக்ஷம் வாகனத்தில் நம்பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் 10ம் தேதி, முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் நடைபெறுகிறது.