பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பெருமாள் திருக்கல்யாணம் வெகு விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2025 01:02
திருப்பதி; உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவை ஒட்டி, அங்கு இஸ்கான் முகாமில் திருப்பதி ஏழு மலையானுக்கு மாதிரி கோயில் அமைக் கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. திருமண மண்டபத்துக்கு ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஏழுமலையான் உற்சவமூர்த்திகளை அர்ச்சகர்கள் குழுவினர் அழைத்து வந்தனர். பின்னர், காலை 11 மணியில் இருந்து பகல் 12 மணிக்குள், வேத மந்திரங்கள் ஓதி, சுப வாத்தி யங்கள் வாசித்து, சாஸ்திர முறைப்படி சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இறுதியாக, சீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாருக்கு நட்சத்திர ஆரத்தி மற்றும் மங்கள் ஆரத்தியுடன் திருக்கல்யாண உற்சவம் நிறைவ டைந்தது. இதை பக்தர்கள் கண்டு பக்திப் பரவசம் அடைந்தனர். நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ் தான துணை தலைமை நிர்வாக அதிகாரி சிவ பிரசாத், இந்து தர்ம பிரச்சார பரிஷத் கூடுதல் செயலாளர் ராம் கோபால், துணை நிர்வாக அதி காரி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.