திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; மிதவை தெப்பத்தில் வலம் வந்த சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2025 03:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று நடந்தது. இக்கோயிலில் ஜன. 29ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயிலில் இருந்து புறப்பாடாகி ரத வீதிகளில் வீதி உலா முடிந்து ஜி.எஸ்.டி. ரோட்டிலுள்ள தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பம் மூன்று சுற்றுக்கள் சுற்றி வந்தது.
பத்தி உலாத்துதல்: மாலை 6:30 மணிக்கு தெப்பக்குளம் மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி பத்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பத்தில் மூன்றுமுறை வலம் வருகிறார். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்.