திருநெல்வேலி; நெல்லை அருகேயுள்ள தருவை செல்வ பாலபாக்ய ஷீரடி சாய்பாபா கோயிலில் 10ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது. நெல்லை மாவட்டம், தருவை செல்வ பாலபாக்ய ஷீரடி சாய்பாபா கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி காலை சிறப்பு ஹோம பூஜை, அபிஷேகம் நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம், மாலை 5:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதனையடுத்து பாபா பல்லக்கு ஊர்வலம், கிரிவலம் வருதல் மற்றும் அன்னதானம் நடக்கிறது. சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்திற்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கலாம்.