குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் வைத்து வழிபட்ட பாதயாத்திரை பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2025 11:02
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் மிட்டாய் வைத்து வழிபாடு நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தை வடிவில் வீற்றிருக்கும் முருகனை வழிபட்டு செல்வது வழக்கம். குழந்தை வேலப்பரிடம் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தருமாறு மனம் உருகி வேண்டிக் கொள்வர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு அடுத்த முறை பாதயாத்திரை வரும்போது குழந்தை வேலப்பருக்கு மிட்டாய்களை வைத்து வழிபாடு செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்கின்றனர்.