குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2025 11:02
கோவை; காரமடை அருகே உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா உறுப்பினர்கள் குழந்தை வேலு,சாவித்திரி, சுரேஷ்குமார், முருகன் மற்றும் திருக்கோவில் செயல் அலுவலர் வனிதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.