பதிவு செய்த நாள்
10
பிப்
2025
02:02
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம் வயலக்காவூர் கிராமத்தில் துலுக்காணத்தம்மன் மற்றும் கெங்கையம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில், இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. முன்னதாக, நேற்று காலை 9:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை ஆகியவற்றுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. பின், மாலை 6:00 மணிக்கு அங்குதார்ப்பணம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹுதி, முதற்கால யாகபூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து, இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஹோமங்கள், தத்வார்ச்சனை நடந்தது. பின், 9:20 மணிக்கு கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல், செம்புலம் கிராமத்தில் அமைந்துள்ள சாமழகி அம்மன் கோவிலிலும், நேற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.