நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் மகா சம்ப்ரோஷணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2025 02:02
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்து இன்று சம்ப்ரோஷணம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி மகா ஹோமங்கள் மற்றும் முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று காலை யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோஷணம் நடந்தது. விழாவில், நகர மன்ற தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் கிரிஜா, தி.மு.க., உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.