பதிவு செய்த நாள்
10
பிப்
2025
02:02
உடுப்பி: காபு மாரியம்மன் கோவிலில், பெரிய மணி பொருத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய, கர்நாடகாவின் முதல் மிகப்பெரிய மணியாகும். உடுப்பியின் காபுவில் உள்ள மாரியம்மன் கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தற்போது கோவிலில் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. கோவிலுக்கு மிகப்பெரிய வெண்கல மணி, காணிக்கையாக வந்துள்ளது. மும்பையின் அலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் மற்றும் ரியலேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனும், நிர்வாக இயக்குனருமான அரவிந்த் ஷெட்டி, அவரது மனைவி பல்லவி தம்பதி, இந்த மணியை காணிக்கையாக வழங்கினர். இது 1,500 கிலோ எடை உள்ளது. ஆந்திராவின் பி.எஸ்.எம்., பவுண்டரீஸ் தொழிற்சாலையில் தயாரான இம்மணி, இன்று காபு வந்தடையும். பிப்ரவரி 9ம் தேதி, ஊர்வலத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்படும். இதை பார்க்க பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த மணி, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய, கர்நாடகாவின் முதல் மிகப்பெரிய மணி என்பது குறிப்பிடத்தக்கது.