Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் குவிந்த ... வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் தைப்பூசம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் தைப்பூசம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
10:02

தஞ்சாவூர்; தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில். பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற மலைக்கோயிலாகும். தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும், சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.


இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா சிறப்பாக பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் கடந்த ஜனவரி 2ம் தேதி உற்சவர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி விசேஷ மலர் அலங்காரத்தில் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, வேலுடன் யானை உருவப்படம் பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் நாள் தைப்பூச தினமான இன்று  அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று, காவிரியாற்றில் தீர்த்தவாரி வைபவமும் நடைபெற்றது. நிறைவாக நாளை  இரவு யதாஸ்தானம் சேர்தலுடன் இவ்வாண்டிற்கான தைப்பூசத்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar