திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்; மலையை சிவனாக சுற்றி வந்து பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 10:02
மதுரை; தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை அடிவார பழநி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் மூலவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் உட்பட பல்வகை அபிஷேகம் முடிந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானை, முத்துகுமார சுவாமி, தெய்வானை தனித்தனியாக புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர். இரண்டு உற்ஸவர்கள் ஒரே நாளில் புறப்பாடாவது தைப்பூசத்தன்று மட்டுமே. பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மலையை சிவனாக சுற்றி வந்து பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.