Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் பழனி ஆண்டவர் கோவிலில் ... திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம் திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டத்திற்கு பந்தக்கால் முகூர்த்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டத்திற்கு பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
11:02

திருவாரூர்; திருவாரூர் தியாகராஜ கோவிலுக்கு சொந்தமான உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு தேரடியில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது


பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழா வரும் மார்ச் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தரோட்டம் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் பங்குனி உத்திரத் திருவிழாவின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள ருண விமோச்சகர் சன்னதிக்கு அருகில் உள்ள கல் தூணிற்கு மஞ்சள் பால் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து திருஞானசம்பந்தர் புறப்பாடு சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. இதனையடுத்து தேரடியில் உள்ள ஆழித்தேர் அருகில் வைக்கப்பட்ட ஐந்து பனஞ் சப்பைகளுக்கு பால் பன்னீர் மஞ்சள்  உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலை மற்றும் மாவிலை அணிவிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட பனஞ் சப்பைகள் விநாயகர் முருகன் அம்பாள் சண்டிகேஸ்வரர்  தேர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதிக உயரமுள்ள பனஞ்சப்பை ஆழித்தேர் எனப்படும் தியாகராஜர் தேரில் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar